ராணிப்பேட்டையில் நடைபெற்ற புத்தகக் காட்சியில் புத்தக ஆலோசகரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
ராணிப்பேட்டை வார சந்தை மைதானத்தில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்கம் சார்பில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.
அங்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், புத்தங்களை தேர்வு செய்ய சிரமமாக உள்ளது எனவும், புத்தகங்களை தேர்வு செய்வதற்கு உதவும் வகையில் ஆலோசகர்கள் குழு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்