கிருஷ்ணகிரி அருகே தோட்டத்து வீட்டில், காவலுக்கு இருந்த இளைஞர் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கந்திகுப்பம் அருகே உள்ள போத்திநாயக்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். இவருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் உறங்கிய நிலையில், வீட்டில் இருந்து அதிகளவு புகை வந்துள்ளது.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைத்த நிலையில், அங்கு பச்சையப்பன் சடலமாக கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.