நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் பாதுகாவலரை கைது செய்த விவகாரத்தில் சட்ட விதிமீறல் நடந்துள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கொளத்தூரில் Advacator Law Associates என்ற புதிய அமைப்பின் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர்கள், சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரத்தில், முன்னாள் ராணுவ வீரரை தேடப்படும் குற்றவாளி போல போலீசார் அடித்து இழுத்துச் சென்றது எதற்காக என்று கேள்வி எழுப்பினர்.
இந்த விவகாரத்தில் பல்வேறு சட்ட வீதி மீறல்கள் நடந்திருப்பதாகவும் வழக்கறிஞர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.