உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை விழாவை முன்னிட்டு பந்தல் கால் முகூர்த்தம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் 18 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான சித்திரை விழா ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதனை முன்னிட்டு பெரிய கோவில் வளாகத்தில் பந்தகால் முகூர்த்தம் நடும் விழா கோலாகலமாக நடைபெற்றது. பந்தகாலுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட நிலையில், மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.