கேரளாவில் 21,000 ரூபாய் மதிப்பூதியம், ஓய்வு பெறும்போது ஐந்து லட்சம் ரூபாய் பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஷா பணியாளர்கள் 24வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். தங்களது கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் ஆஷா பணியாளர்கள் தெரிவித்தனர்.