அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், ‘அனோரா’ திரைப்படம் 5 விருதுகளை வென்றது.
சிறந்த படத்தொகுப்பு, திரைக்கதை, திரைப்படம், இயக்குனர், நடிகை என முக்கிய பிரிவுகளில் விருதுகளை வென்று அந்தப் படம் அசத்தியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியான இந்தப் படம் உலகம் முழுவதும் 41 மில்லியன் டாலர் வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.