அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டது.
இந்த காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்சின் மலைப்பகுதிகளுக்கு வேகமாக பரவியது. இதனால் அங்கு கடும் புகைமூட்டம் நிலவியது.
காட்டுத் தீயில் சிக்கி ஏராளமான வீடுகள், வாகனங்கள் நாசமாகின. தண்ணீரை பீய்ச்சியடித்து காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர்.