ரஞ்சி கோப்பையை வென்ற விதர்பா அணிக்கு 3 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என விதர்பா கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
90-வது ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் விதர்பா – கேரளா அணிகள் ஆடிய நிலையில், முதல் இன்னிங்சில் விதர்பா 379 ரன்னும், கேரளா 342 ரன்னும் எடுத்தன.
தொடர்ந்து 37 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய விதர்பா 375 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தை டிராவில் முடித்துக் கொள்ள இரு கேப்டன்களும் ஒப்புகொண்டனர். விதர்பா முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் காரணமாக சாம்பியன் பட்டத்தை வென்றது.