நீட் ரகசியத்தை DADDY மற்றும் SON உடனடியாக சொல்ல வேண்டும் எனவும், இல்லையென்றால் திமுக பொய்தான் சொன்னது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நீட் தேர்வு குறித்த அச்சத்தால் இந்துமதி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.
மருத்துவர் ஆகிவிடலாம் என்கிற உயரிய லட்சியத்தோடு படித்து வரும் மாணவர்கள் மத்தியில் நீட் ரகசியத்தை சொல்லாமல் பொய்யான நம்பிக்கை அளித்து, அவர்களை குழப்பத்திலேயே வைத்திருக்கும் திமுக அரசுதான் மாணவியின் மரணத்திற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நீட் ரகசியத்தை DADDY மற்றும் SON உடனடியாக சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ள அவர், அப்படி இல்லையென்றால் திமுக பொய்தான் சொன்னது என்ற உண்மையை ஒப்புக்கொண்டு, இனியாவது எந்த நீட் மரணமும் நிகழாமல் தடுக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.