குஜராத்தின் வந்தாராவில் உள்ள வனவிலங்கு மீட்பு, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார்.
2 நாள் பயணமாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தேசிய வனவிலங்கு தினத்தையொட்டி ஜூனகத் மாவட்டத்தில் உள்ள கிர் வனவிலங்கு சரணாலயத்திற்கு சென்றார்.
அங்கு திறந்த ஜீப்பில் பயணம் செய்த அவர் சிங்கங்களை மிக அருகில் கண்டு ரசித்தார். பின்னர் சாசனில் நடைபெற்ற தேசிய வனவிலங்குகள் வாரிய கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
இதனை தொடர்ந்து தொடர்ந்து ஜாம்நகரில் உள்ள வந்தாரா விலங்குகள் மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது, ஆசிய சிங்கக் குட்டிகள், வெள்ளை சிங்கக் குட்டி, சிறுத்தை குட்டி, கேரகல் குட்டி உள்ளிட்ட பல்வேறு விலங்களுடன் விளையாடி உணவளித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி வனவிலங்குளுடன் விளையாடியது, உணவளித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை அடுத்து, வந்தாரா விலங்குகள் மையத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்குச் சென்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.