திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தெருநாய்கள் கடித்ததில் 2 பள்ளி மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வந்தவாசி பஜார் வீதியில் அமைந்துள்ள கடையில் பிஸ்கட் வாங்கி கொண்டிருந்த தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை தெருநாய் கடித்துள்ளது.
இதேபோல, வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் தாயுடன் வந்த அரசு பள்ளியில் 3ஆம் வகுப்பு பயிலும் மாணவியையும் தெருநாய் கடித்து குதறியுள்ளது.
இரு மாணவிகளுக்கு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாணவிகளை நாய் கடித்து குதறிய வீடியோ இணையத்தில் வைரலனாது.
இந்நிலையில், தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.