துபாயில் இன்று நடைபெற உள்ள முதல் சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.
8 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் துபாயில் இன்று நடைபெற உள்ள முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
நாளை லாகூரில் நடைபெறும் 2-வது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.