புவனேஸ்வரில் மூளைச்சாவு அடைந்த 16 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம், புவனேஸ்வரைச் சேர்ந்த 16 மாத குழந்தை உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 12ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.
மூச்சு திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த குழந்தை ஜன்மேஷ் கடந்த 1ஆம் தேதி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைபடி குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர். இதனடிப்படையில், குழந்தையின் கல்லீரம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.
16 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.