கோவையில் உயர் ரக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவை சேர்ந்த மாத்தான், ரியாஸ், அமல் , அப்துல் சலீம், அன்சாத் மற்றும் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த அசாருதீன் ஆகியோர் சமூக வளைதளங்கள் மூலம் தொடர்பு கொண்டு மெத்தபெட்டமைன் போன்ற போதைப் பொருட்களை மொத்தமாக வாங்கி, பெங்களூர் மற்றும் கோவை மாநகர் பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளனர்.
குறிப்பாக கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருட்களை விற்பனை செய்து வந்த நிலையில் தனிப்படை போலீசார் 6 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 53 கிராம் மெத்தபெட்டமைன், 20 எல்எஸ்டி ஸ்டாம்ப், ஒரு கார் மற்றும் 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ஏற்கனவே இதுதொடர்பான வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.