குற்றால அருவிகளில் 4 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்தனர்.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக கடந்த 28ஆம் தேதி குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து காணப்படுவதால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அய்யா வைகுண்டர் பிறந்த தினத்தையொட்டி தென்காசியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.