மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு பிரபலமான ஐஐடி பாபா கஞ்சா வழக்கில் கைதானார்.
ஐ.ஐ.டி. பாம்பேயில் பட்டம் பெற்ற அபய் சிங் மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட பிறகு பிரபலமடைந்தார். உண்மையை தேடிய பயணத்தால் ஆன்மிகத்தில் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்த அபய் சிங் பிறகு ஐ.ஐ.டி. பாபாவாக உருவெடுத்தார்.
இந்த நிலையில், ஜெய்ப்பூரை அடுத்த ரித்தி சித்தி பகுதியில் செயல்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றில் ஐ.ஐ.டி. பாபா பிரச்னை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஐ.ஐ.டி. பாபாவை சோதனி செய்து, அவர் வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
நிர்ணயிக்கப்பட்டதை விட குறைந்த அளவில் கஞ்சா வைத்திருந்ததால் ஐஐடி பாபா ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.