இந்தியாவுடன் நல்லுறவு வைப்பதைத் தவிர வங்கதேசத்துக்கு வேறு வழியில்லை வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், தாய்லாந்தில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசவுள்ளதாக கூறியுள்ளார்.
அப்போது இரு நாடுகளுக்கு இடையே உள்ள நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் எனவும் முகமது யூனுஷ் தெரிவித்துள்ளார்.