குழந்தை போல் கனவு கண்டு அனைத்துக் கட்சி கூட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டியுள்ளார் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மையக்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தொகுதி மறுவரையறை விவகாரம், மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பின் பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, குழந்தை போல் கனவு கண்டு அனைத்துக் கட்சி கூட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டுகிறார் என விமர்சித்தார். தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு ஏதேனும் அறிவித்துள்ளதா? என கேள்வி எழுப்பிய அவர், பொய்யான பிம்பத்தை மக்களிடம் திமுக கட்டமைக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.