திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளின் பட்டியலை அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
பாஜக மையக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளின் பட்டியலை முதல்வர் வெளியிட வேண்டும் என தெரிவித்தார்.
கலவரத்தை தூண்டுவதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது என்றும், மாணவர்கள் ஏன் விருப்பப்பட்ட மொழியை படிக்கக் கூடாது என பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.