கோவையில் மத்திய அரசின் மேம்பாட்டு நிதியில் இருந்து நடைபெற்ற ஜவுளி தொழில்நுட்பப் பயிற்சி தொடக்க விழாவில் பிரதமர் புகைப்படம் இடம்பெறாததைக் கண்டித்து அதிகாரிகளுடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், அவிநாசி சாலை சித்ரா பகுதியில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு நிதியில் இருந்து தொழில் முனைவோர்களுக்காக ஜவுளி தொழில்நுட்பம் குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்த நிலையில், பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறாததற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், அதிகாரிகளை முற்றுகையிட்டு பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கருணாநிதியின் புகைப்படத்திற்கு மேல் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டி விழாவை நடத்தினர்.