பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 5 மெட்ரோ திட்டப் பணிகளுக்கு ஒரு லட்சத்து 242 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கேதார்நாத் கோயிலில் ரோப் கார் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், சுமார் 4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்த ரோப் கார் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும்,ரோப் கார் திட்டம் மூலம் 9 மணி நேரப் பயணம் 36 நிமிடங்களாக குறையும் எனவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.