மத்திய அரசின் திட்டங்களை தமிழக முதலமைச்சர் காப்பி அடித்து தனது திட்டமாக செயல்படுத்தி வருகிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியபோது திமுக எம்.பிக்கள் அந்த விழாவை புறக்கணித்ததாக தெரிவித்தார்.
“காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் உள்ளிட்ட விழாக்களில் கலந்துகொள்ள பிரதமர் அழைப்பு விடுத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணித்ததாகவும் அவர் கூறினார்.
செல்வமகள் சேமிப்பு, விவசாயிகள் கடன் உரிமை உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்றதன் மூலம் கமல்ஹாசன் எம்.பி. சீட்டை உறுதி செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எம்பிக்கள் என்றால் என்ன என்பதை தவெக தலைவர் விஜய்யிடம் யாராவது கூற வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.