அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அடுத்தடுத்த சாட்சிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கடந்த 2011 – 2015ஆம் ஆண்டுகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இதுதொடர்பான வழக்கின் விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. முதல் சாட்சியின் விசாரணை நிறைவடைந்த நிலையில், அடுத்தடுத்த சாட்சிகளிடம் விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியது.
இதற்கு அனுமதியளித்த நீதிபதி கார்த்திகேயன், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராக உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மார்ச் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.