பழனி கோயில் நவபாஷாண முருகன் சிலை இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் உறுதித்தன்மையுடன் இருக்கும் என்று சிலை பாதுகாப்பு குழுவின் தலைவர் பொங்கியப்பன் தெரிவித்துள்ளார்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மூலவரான நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலை உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகர் சித்தரால் வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த சிலையை பாதுகாக்கும் வகையில் ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினை தமிழக அரசு நியமித்தது. இந்தநிலையில் சிலை பாதுகாப்பு குழு, பழனி முருகன் கோயில் நவபாஷான முருகன் சிலையை ஆய்வு செய்தது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்குழுவின் தலைவர் பொங்கியப்பன், நவபாஷாண முருகன் சிலை பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் உறுதியுடன் இருப்பதாகவும், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் சிலை அதன் உறுதித்தன்மையுடன் இருக்கும் என்றும் தெரிவித்தார்.