நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றும் விவகாரம் - அரசு உயரதிகாரிகள் மீது மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிருப்தி!
Sep 10, 2026, 10:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றும் விவகாரம் – அரசு உயரதிகாரிகள் மீது மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிருப்தி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 6, 2025, 08:32 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசு உயர் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு பணியாற்றி வருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பட்டு தேவானந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துணை ஆட்சியராக பணியாற்றியவரை பணி ஓய்வு பெறும் நாளில் காரணமின்றி இடைநீக்கம் செய்ததை எதிர்த்து அண்மையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அதேபோல, நெல்லையைச் சேர்ந்த தனிநபரும் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த இரு வழக்குகளும் நீதிபதி பட்டு தேவானந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு விளக்கத்தை அளிக்க தமிழக வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அமுதா நேரில் ஆஜரானார்.

வழக்கு விசாரணையின்போது பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதி, கடந்த 2 மாதங்களில் மட்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார்.

கல்வித்துறையில் அதிகமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி,  அரசு உயர் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு பணியாற்றி வருவதாகவும்  தெரிவித்தார்.

கடந்த 2023-ம் ஆண்டு தலைமை செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டது தேவையற்றதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அப்போது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட வருவாய் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அரசு சார்பில் முன்வைக்கப்பட்டது.  அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

Tags: High Court madurai benchimplementing court orders issue.Tamil Nadu Revenue Principal Secretary Amudha appearedsenior government officials not implement court orders.
Share
Tweet
SendShare
Previous Post

பழனி கோயில் நவபாஷாண முருகன் சிலை உறுதியாக உள்ளது – சிலை பாதுகாப்பு குழு தலைவர் பேட்டி!

Next Post

திருப்பத்தூர் அருகே எருது விடும் போட்டி – 3 இளைஞர்களுக்கு கத்திக்குத்து!

Related News

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies