சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் இடையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டத்திற்கு தமிழக அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததாகவும் 9 ஆயிரத்து 445 கோடி ரூபாய் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் தயானந்த கிருஷ்ணன் என்பவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதில், சென்னை விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டம் இன்னும் முடிவடையவில்லை என்றும், தமிழக அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ல் சமர்ப்பிக்கப்பட்ட கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.