கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
பொள்ளாச்சியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடத்தப்படும் தேர்த்திருவிழா இந்த முறையும் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் எழுந்தருளிய அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் பங்கேற்க பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கோயிலில் இருந்து புறப்பட்ட திருத்தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் வெள்ளிக் கிழமை கோயிலை வந்தடைய உள்ளது.