காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தங்க சூரிய பிரபை உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 4-ம் நாள் பிரம்மோற்சவமான தங்க சூரிய பிரபை உற்சவத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அம்மனுக்கு தலையில் சூரியன்- சந்திரன் கூடிய கொண்டை அணிந்து அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் முப்பெரும் தேவியர்களும் தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க அம்மன் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். காமாட்சி அம்மனின் சூரிய பிரபை உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.