ஆன்லைன் மூலம் நடைபெறும் கையெழுத்து இயக்கத்திற்கு 1 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அரசின் தடையையும் மீறி, பாஜக தலைவர்கள் வீடு வீடாக சென்று கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கை மூலம் வெற்றி காணாத முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது கற்பனையான இந்தி திணிப்புக்கு தாவியுள்ளதாக விமர்சித்துள்ள அண்ணாமலை, தமிழை வளர்ப்பதாக கூறி மக்களை இனியும் முதலமைச்சர் ஸ்டாலின் ஏமாற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கையின் பல அம்சங்கள் ஏற்கனவே தமிழகத்தில் செயல்படுத்தப்படுவதாக ஒப்புக்கொண்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் தற்போது புதிய கல்வி கொள்கையை விஷம் என்று கூறி இரட்டை வேடம் போடுவதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.