ஆந்திராவில் தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஐதராபாத்தில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்து காக்கிநாடா நோக்கி பயணித்தது. எலூரு அருகே தனியார் பேருந்து அதிவேகமாக பயணித்ததாக கூறப்படும் நிலையில், எதிரே வந்த லாரி பேருந்து மீது மோதியது.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 22 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.