தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சேவா பாரதி தமிழ்நாடு மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல், ஊட்டமலை, மணல்மேடு உள்ளிட்ட பகுதி வாழ் மக்களுக்கான இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
சேவா பாரதி தமிழ்நாடு மற்றும் சேலம் ரீத்தம் மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமில் மேல் சிகிச்சை தேவைப்படும் மக்களுக்கு அரசு காப்பீட்டு திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகளை சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பினர் மேற்கொண்டனர்.
மலைவாழ் பகுதிகளை தேடிச்சென்று அந்த பகுதி மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய இருப்பதாக சேவா பாரதி அமைப்பினர் தெரிவித்தனர்