ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள டால் ஏரி ரம்மியமாக காட்சியளிக்கிறது.
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் வெப்ப நிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதிகபட்ச வெப்ப நிலை தற்போது அங்கு 12 டிகிரி செல்சியசாக உள்ள நிலையில், உறைந்து காணப்பட்ட டால் ஏரி தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
குளிர் அலைகளும் தற்போது அங்கு குறைந்துள்ள நிலையில், அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது.