கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ அதிகாரத்தில் நீடிக்க வர்த்தக போரை பயன்படுத்த முயற்சிக்கிறார் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரியை விதிக்கும் உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கு கனடாவும் வரி விதித்தது.
இந்த நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ உடன் தொலைபேசியில் நடத்திய கலந்துரையாடல் குறித்து கருத்து தெரிவித்துள்ள டொனால்டு டிரம்ப், கனடா பிரதமர் தேர்தல் எப்போது நடக்கிறது என்று தற்போது வரை ட்ரூடோவால் கூற முடியவில்லை என தெரிவித்தார்.