மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பொட்டுலுபட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் கவாஸ்கர் என்பவருக்கு, அதே பகுதியை சேர்ந்த அகில இந்திய பார்வட் ப்ளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆதிசேடன் என்பவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
வீடியோ ஆதாரத்துடன் கவாஸ்கர் புகாரளித்த நிலையில் ஆதிசேடன் மீது கொலை மிரட்டல், பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.