தேனி மாவட்டம் மேகமலை அடர் வனப்பகுதியில் உற்பத்தியாகும் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேகமலை வனப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மூலவைகை ஆற்றில் வறண்ட நிலையே காணப்பட்டது.
தற்போது ஓயம்பாறை, வாலிபாறை வனப் பகுதிகளில் மாலை நேரங்களில் பெய்து வரும் சாரல் மழையால் மூலவைகை ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.