ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்திய கிரிக்கெட் அணிக்கு சாதகமானது அல்ல என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது. இதனிடையே துபாய் மைதானத்தில் மட்டும் இந்திய அணி விளையாடுவதால் வீரர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படுவதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்திய கிரிக்கெட் அணிக்கு சாதகமானது அல்ல என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய அணி சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியதால் வெற்றி பெற்றதாகவும் அவர் கூறினார்.