திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும்
இலவச சாப்பாட்டுடன் தற்போது மசால் வடையும் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கான திட்டத்தை திருமலையில் உள்ள அன்னதான கூடத்தில் அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், தினமும் 35 ஆயிரம் மசால் வடைகள் தயார் செய்யப்படும் என்றும், அதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.