ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக லண்டனில் பாகிஸ்தான் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பதில் அவரை திகைப்பில் ஆழ்த்தியது.
லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது குதர்க்கமாக கேள்வி கேட்கப்போவதாக கூறி, பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பேசி இந்திய பிரதமர் மோடி தீர்வு காணலாமே என பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மிகவும் இயல்பாக பதிலளித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் திருடிய காஷ்மீர் பகுதிகளை மீட்டதும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என நெத்தியடி பதிலளித்தார்.
அவரது பதிலை சற்றும் எதிர்பாராத பாகிஸ்தான் செய்தியாளர், வேறு கேள்வி ஏதுமின்றி திக்குமுக்காடினார்.