ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்தி பங்கேற்ற கூட்டத்திற்கு தலைக்கு 100 ரூபாய் கொடுத்து பொதுமக்கள் அழைத்து வரப்பட்டனர்.
ராணிப்பேட்டை அருகே உள்ள செட்டித்தாங்கள் கிராமத்தில் பள்ளி கட்டங்கள், அங்கன்வாடி கட்டடங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்டவற்றின் திறப்பு விழா நடைபெற்றது. அமைச்சர் காந்தி கலந்து கொண்ட இந்த விழாவிற்கு பொதுமக்கள் பெருமளவில் வரவில்லை. எனவே, 200 ரூபாய் கொடுப்பதாக கூறி, சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பெண்களை திமுகவினர் அழைத்து வந்தனர். அவர்களுக்கு திமுகவினர் 100 ரூபாய் விநியோகித்த வீடியோ வெளியாகியுள்ளது.
அனைவருக்கும் தலா 200 ரூபாய் தருவதாகக்கூறி அழைத்து வந்து விட்டு, வெறும் 100 ரூபாய் மட்டுமே தரப்பட்டதாக பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.