டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை தமிழகத்திற்கு தலைக்குனிவு என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஊழல் நாடாக தமிழ்நாட்டை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
2016ஆம் ஆண்டு தலைமை செயலகத்தில் நடைபெற்ற வருமானவரி சோதனையால் தமிழகத்திற்கு தலைக்குனிவு என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை, தற்போது டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடப்பது என்ன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வழக்கம்போல இந்த விவகாரத்தையும் திசை திருப்ப முடியுமா என பாருங்கள் என்று தனது பதிவில் அண்ணாமலை கூறியுள்ளார்.