குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இரும்புக்கரத்தின் துருவை துடைத்தெறிந்து முதலமைச்சர் செயல்பட வேண்டும் என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற குற்றச் சம்பவங்களை பட்டியலிட்டுள்ளார்.
திமுக ஆட்சி யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி என்பதே நாள்தோறும் வரும் செய்திகள் சொல்லும் உண்மை என தெரிவித்துள்ள அவர், சட்டம் ஒழுங்கை காப்பதில் கவனம் செலுத்தாமல் முதலமைச்சர் அலட்சியமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களுக்கு துளியும் சம்மந்தமில்லாத விஷயங்களை முன்னிலைப்படுத்தி இதுபோன்ற குற்றச் சம்பவங்களை கடக்க முயற்சிப்பது மகளிருக்கு இழைக்கும் மன்னிக்க முடியாத துரோகம் என இபிஎஸ் விமர்சித்துள்ளார்.