உலக பொருளாதாரத்தையே இந்தியா வழி நடத்துவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஆங்கில செய்திச் சேனல் சார்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாடு விடுதலை பெற்று 65 ஆண்டுகளைக் கடந்தபோது 11-ஆவது பொருளாதாரமாக இருந்த இந்தியா, கடந்த 10 ஆண்டுகளில் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியதை நினைவு கூர்ந்தார்.
இதே வேகத்தில் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா விரைவில் முன்னேறும் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர், தற்போது 18 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கு காங்கிரஸின் ஊழலை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டார்.
கடந்த 2007-ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் ஜிடிபி ஒரு ட்ரில்லியன் டாலரை எட்டியதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, தற்போது ஒரே காலாண்டில் 1 ட்ரில்லியன் டாலர் மதிப்பில் நாட்டில் வர்த்தகம் நடைபெற்றதாக பெருமிதம் தெரிவித்தார்.