தாத்ரா மற்றும் நாகர்ஹவேலியில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கூட குழந்தைகள் ஸ்மார்ட் வகுப்புகளில் கல்வி கற்பது தனக்கு பெருமை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தள்ளார்.
யூனியன் பிரதேசமான தாத்ரா நகர் ஹவேலியில் உள்ள சில்வாசாவில், 460 கோடி ரூபாய் மதிப்பில் நமோ மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்து வைப்பதற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அப்போது சாலையின் இரு புறங்களிலும் திரண்டிருந்த மக்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் 450 படுக்கைகளுடன் உருவாக்கப்பட்டுள்ள நமோ மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து விழாவில் பேசிய பிரதமர் மோடி தாத்ரா நாகர்ஹவேலியில் இந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் குஜராத்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் கல்வி கற்பிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கூட குழந்தைகள் ஸ்மார்ட் வகுப்புகளில் கல்வி கற்பது பெருமை அளிப்பதாகவும் அவர் கூறினார்.