அதானி நிறுவனத்தின் தாராவி குடிசை மறுசீரமைப்பு திட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மும்பை, தாராவியில் உள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை இடித்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருகிறது.
இத்திட்டத்தை நிறைவேற்ற பல முறை டெண்டர் விடப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக துபாயை சேர்ந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில், இதனை விசாரித்த நீதிபதிமன்றம், தாராவி குடிசை மறுசீரமைப்பு திட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு கூறியுள்ளது.