சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி குஜராத்துக்கு 9 நாடுகளின் பெண் தூதர்கள் வருகை புரிந்துள்ளனர்.
1975ம் ஆண்டில் மார்ச் 8ம் தேதியை சர்வதேச பெண்கள் தினமாக ஐ.நா சபை அங்கீகரித்தது. அந்தவகையில் நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி குஜராத்துக்கு 9 நாடுகளின் பெண் தூதர்கள் வருகை புரிந்துள்ளனர்.
அவர்களுக்கு மாலையணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அதானிக்கு சொந்தமான நிறுவனங்களில் பசுமை எரிசக்தி தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.