இஸ்ரேலில் காணாமல் போன இந்திய கட்டுமான தொழிலாளர்கள் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தூதகரம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தொடங்கிய பிறகு, பாலஸ்தீன கட்டுமானத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
இதனால், ஏற்படும் கட்டுமான தொழிலாளர்களின் பற்றாக்குறையைப் போக்குவதற்காக, கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 16 ஆயிரம் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அப்படி வந்த இந்திய தொழிலாளர்களில் 10 பேர் திடீரென மாயமாகினர். இது தொடர்பாக இஸ்ரேல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், மேற்கு கரை பகுதியில் இருந்து 10 இந்தியர்கள் இஸ்ரேல் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.