நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. தற்போது வீரர்களுக்காக புதிய கட்டுப்பாடுகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதன்படி, வீரர்கள் தங்களது அணி நிர்வாகம் ஏற்பாடு செய்யும் பேருந்துகளில்தான் பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பரிசளிப்பு நிகழ்வின்போது வீரர்கள் ஸ்லீவ்லெஸ் ஜெர்சி அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.