டாஸ்மாக் முன்னாள் மேலாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
டாஸ்மாக் மதுபான கொள்முதல், விற்பனை மற்றும் மதுபானக் கூடம் ஒதுக்கீடு உள்ளிட்டவைகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை, சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான நிறுவனம், அம்பத்தூரில் உள்ள டாஸ்மாக் கிடங்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது.
இந்நிலையில், திருவான்மியூரில் வசித்து வரும் முன்னாள் டாஸ்மாக் மேலாளரான காளிதாஸ் வீட்டிலும் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.