குஜராத் மாநிலத்தில் நடைபெறும் உணவு பாதுகாப்பு செறிவூட்டல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி குஜராத் சென்றார். சூரத் நகரில் நடைபெறும் உணவு பாதுகாப்பு செறிவூட்டல் பிரச்சாரத்தை தொடங்கிவைத்த அவர், கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதை தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பல்வேறு வழிகளிலும் நாட்டின் முன்னணி நகரமாக சூரத் திகழ்வதாக கூறினார். மேலும், பொதுமக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் மத்திய அரசு தனி கவனம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.