கொங்கு பகுதியை முன்னேற்ற அனைத்துக் கட்சியினரும் அரசியல் வேறுபாடின்றி ஒன்றிணைய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கொங்கு மண்ணின் பெருமையை பறைசாற்றும் வகையில் பாஜக மூத்த தலைவர் கார்வேந்தன் எழுதிய கொங்கு ரத்தினங்கள், கொங்கு மாமணிகள் ஆகிய 2 நூல்களின் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. இதில் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் பங்கேற்று நூல்களை வெளியிட்டனர்.
விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், கொங்கு பகுதிகளின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஆன்மிகம் எனக் கூறினார். கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற சொல்லுக்கேற்ப கொங்கு பகுதியை முன்னேற்ற அனைத்துக் கட்சியினரும் அரசியல் வேறுபாடின்றி ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.